top of page

எங்களை பற்றி

Kolam2_edited.jpg

எங்கள் நோக்கம்

நரம்பியல் நோய்கள் பலவீனம் மற்றும் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதுபோன்ற பெரும்பாலான கோளாறுகளுக்கு நீண்டகால மேலாண்மை தேவைப்படுவதால், மருத்துவ மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு பராமரிப்பாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழிகாட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

நரம்பியல் கோளாறுகளை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி ஆதரவளிக்கும் தமிழில் முழுமையான, இலவசமான, விரிவான, நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் அணுகக்கூடிய வளங்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு.

Kolam_edited.jpg

எங்கள் செயல் திட்டம்

நரம்பியல் நோய்கள் மற்றும் அவற்றின் மறுவாழ்வு தொடர்பான துல்லியமான தகவல்களைப் பொது மக்களுக்கு (நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் உட்பட) எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் வழங்குவோம் என்று நம்புகிறோம்.

இதில் பொதுவான நரம்பியல் நோய்கள், அவற்றின் அறிகுறிகள், நோயறிதல் மற்றும் மேலாண்மை பற்றிய கண்ணோட்டங்கள் அடங்கும். தற்போதுள்ள மருத்துவத் தலையீடுகளுக்கு மேலதிகமாக புனர்வாழ்வை ஒரு பயனுள்ள நடவடிக்கையாக முன்னிலைப்படுத்த உத்தேசித்துள்ளோம்.

Kolam3_edited.jpg

ஒப்புகை

Tributes and acknowledgments

bottom of page