நரம்பியல் நோய்கள்
நரம்பியல் நோய்களுடன் வாழ்வது ஒரு சவாலாக இருக்கலாம். இருப்பினும், மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறை தலையீடுகள் மூலம் அந்த சவாலை எதிர்கொள்ளவும் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முடியும். இந்த தலையீடுகள் பற்றிய விழிப்புணர்வு நோயாளியின் பராமரிப்புக்கு உதவும்.
கூடுதலாக, வயதானவர்களிடையே ஐந்து முக்கிய கவலைகள் மற்றும் பாதுகாப்பின்மைகள் இருக்கலாம். இவை:1. நோய்கள், 2. இயலாமை (disability), 3. சார்புநிலை (dependency), 4. மறதிநோய் (dementia) மற்றும் 5. இறப்பு. இந்த சூழலில், பராமரிப்பாளரின் பங்கு முக்கியமானது. கவனிப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் பொருந்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நோயாளி மற்றும் பராமரிப்பாளர் இருவருக்கும் பாதுகாப்பாகவும் நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
கீழே சில நரம்பியல் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை பற்றிய பயனுள்ள விவரங்களைக் காணலாம்.